தேசியம்
செய்திகள்

Delta மாறுபாடு ஆதிக்கம் செலுத்தினால் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும்

COVID தொற்றின் பரவலில் நீடித்த சரிவை வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam, துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Howard Njoo ஆகியோர் இணைந்து புதிய modelling தரவுகளை வெளியிட்டனர். புதிதாக வெளியிடப்பட்ட தேசிய modelling நாடு முழுவதும் தொற்றின் நீடித்த சரிவை குறிக்கிறது

இது மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும் என பிரதமர் Justin Trudeau குறிப்பிட்டுள்ளார். இதனால் கனடாவின் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது தொடரும் எனவும் பிரதமர் கூறினார்.

April நடுப்பகுதியில் மூன்றாவது அலையின் உச்ச நிலையிலிருந்து சராசரி தொற்றின் எண்ணிக்கை 90 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் தினமும் 750 வரையிலான புதிய தொற்றுக்கள் பதிவாகின்றன என வைத்தியர் Tam கூறினார்.

இதன் விளைவாக, அடுத்த இரண்டு மாதங்களில் புதிய தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள், அவசர சிகிச்சையின் தேவை, இறப்புகள் ஆகியவற்றின் வீழ்ச்சி எதிர்கொள்ளப்படும்.

வெள்ளிக்கிழமை வெளியான modelling இப்போது முதல் July 4ஆம் திகதிக்கு இடையில், கனடாவில் சுமார் 8,600 புதிய தொற்றுக்களும் சுமார் 280 இறப்புகளும் பதிவாகலாம் என எதிர்வு கூறுகின்றது.

அதேவேளை புதிதாக பரவும் delta மாறுபாடு தொடர்ந்து ஒரு சவாலாக உள்ளதாக கனடாவின் பொது சுகாதார அமைப்பின் புதிய தேசிய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. Delta மாறுபாடு ஆதிக்கம் செலுத்தினால், தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் எனவும் பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

Related posts

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan

Kelowna நகர முன்னாள் முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan

Leave a Comment