தேசியம்
கட்டுரைகள் ராகவி புவிதாஸ்

Doug Ford பெருந்தொற்றை எவ்வாறு கையாண்டார் என்பது குறித்த ஒரு சர்வசன வாக்கெடுப்பாக அடுத்த தேர்தல் அமையும்!

அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுவது போல், Ontarioவின் 2022 ஆம் ஆண்டு தேர்தல்
முதல்வர் Doug Ford, COVID பெருந்தொற்றை கையாளும் விதம் பற்றிய ஒரு சர்வசன
வாக்கெடுப்பாக அமையும் என்பதால், அடுத்த மாகாண சபை தேர்தலுக்கு ஒரு வருடம்
முன்னதாகவே Progressive Conservative கட்சி குறிப்பிடத் தகுந்தளவில் நிதி விடயத்தில்
உறுதியாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் “மாகாணம் முன்னர் எப்போதும் அறிந்திராதவாறான
வளமை” எனும் வாக்குறுதிகளுடன்தான் கடந்த 2018 ஆம் ஆண்டில் Fordஉம் அவரது
Progressive Conservativeகட்சியும் Ontarioவில் 15 ஆண்டு கால Liberal ஆட்சியை
முடிவிற்குக் கொண்டு வந்தனர்.

கடந்த 6 மாதங்களாக செய்த மின்னஞ்சல் பிரசாரங்கள் மூலமும், 1000 டொலர் மெய்நிகர் நிதி திரட்டல் மூலமும் தமது அரசியல் பங்களிப்புகளை திடப்படுத்த செயற்பட்டமை Progressive Conservative கட்சிக்கு நல்ல விளைவினை உருவாக்கியுள்ள நிலையில், COVID பெருந்தொற்றை கையாண்ட விதத்தைப் பொறுத்தே Fordஇன் மாகாண அரசியல் செயற்பாடுகளின் எதிர்காலம் நான்கு ஆண்டுகளின் பின் தீர்மானிக்கப்படப்போகிறது.

Ontario தேர்தலகத்திற்கு (Elections Ontario) சமர்ப்பிக்கப்பட்ட கட்சியின் பங்களிப்பு
தரவுகளின் படி, Progressive Conservative கட்சி 2021 ஆம் ஆண்டின் முதல் ஐந்து
மாதங்களில் 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியை அரசியல் பங்களிப்புகள் மூலம் திரட்டியுள்ளது – இது ஏனைய மூன்று அரசியல் கட்சிகளும் பெற்றுக்கொண்ட ஒட்டுமொத்த தொகையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

Ontario புதிய ஜனநாயகக் கட்சி சுமார் 332,813 டொலர்களுடன் இரண்டாவது இடத்தில்
உள்ளது. Ontario Liberal கட்சி 233,464 டொலர்களுடனும், பசுமைக் கட்சி 151,607
டொலர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பெருந்தொற்றின் போது கட்சிக்கு ஆதரவாயிராத சில வாக்காளர்களின் நம்பிக்கையை
மீண்டும் பெற்றுக்கொள்ள போராடுவதால், Progressive Conservative கட்சிக்கு நிதி
திரட்டலில் முதலிடத்தைப் பெற்றிருப்பது இன்றியமையாதது.

கடந்த சில வாரங்களில் மீளெழுவதற்கு முன்னதாக, April, May, மாதங்களில் அடுத்தடுத்த கணக்கெடுப்புகளில், Ontario Liberal கட்சிக்கு பின்னால் இரண்டாவது இடத்திற்கு Progressive Conservative கட்சி வந்ததாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டின.

இருப்பினும், தற்போதிலிருந்து ஒரு வருடத்தின் பின்னரும் கூட பெருந்தொற்றை
அரசாங்கம் கையாண்ட விதம் மக்களின் மனங்களில் முக்கியமானதாக இருக்கும் என
Queen’s Parkஇன் முன்னாள் அரசியல் ஊழியரும் Conservative மூலோபாயவாதியும்

கூட்டாட்சி (மத்திய) Conservative கட்சிக்காக 2019 தேர்தல் பிரசாரத்தில்
பணியாற்றியவருமான Jamie Ellerton நம்புகிறார்.

“இந்த தேர்தல் Doug Ford  மற்றும் அவரது அரசாங்கம் மீதான சர்வசன வாக்கெடுப்பாக
அமையப் போகிறதென நான் நினைக்கிறேன். அது தான் மையப் புள்ளியாக இருக்கும்.
அதை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது விவாதத்திற்குரியது என
நினைக்கிறேன்,” என Ellerton குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் கிடைக்காவிட்டால், 2022 தேர்தல் பல தலைவர்களுக்கு
தனிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பிற அரசியல் வல்லுநர்கள்
தெரிவிக்கின்றனர்.

இந்த தேர்தலில் NDPயின் தலைவி Andrea Horwath அதிகம் இழப்பை சந்திப்பார் என
முன்னாள் முதல்வர் Dalton McGuintyயின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றிய
Jim Warren நம்புகிறார். இது NDPயின் தலைவியாக Andrea Horwath எதிர்கொள்ளும்
நான்காவது தேர்தலாகும்.

‘இது முதல்வராகும் கடைசி வாய்ப்பாக அவருக்கு இருக்க வேண்டும் ,ஒன்று அவர்
முதல்வராவார் அல்லது தனிப்பட்ட குடிமகனாவார்,” என Warren குறிப்பிட்டுள்ளார்.
Horwath 2018 தேர்தலின் போது 40 இடங்களை கைப்பற்றினார். இது 1990 களின்
முற்பகுதியில் Bob Raeஇன் NDP அரசாங்கத்திற்குப் பிறகு பதிவான மிக அதிக ஆசன
எண்ணிக்கையாகும். Ontario Liberal கட்சி வேகமாக முன்னேறி இருப்பதால், சமீபத்திய
கருத்துக் கணிப்புகளில் NDP மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில்  கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட Steven Del Ducaவிற்கு
கிடைத்த குறைந்த அங்கீகாரம், வெறுமையாகியுள்ள வங்கிக் கணக்கு ஆகியவற்றின்
விளைவாக 2022 ஆம் ஆண்டு தேர்தல் மிக சவாலானதாக அமையும் என Warren
தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை அரசாங்கம் எனும் நிலையிலிருந்து குறைந்து Ontario சட்டமன்றத்தில் 7 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றிய 2018 ஆம் ஆண்டு தேர்தலின் போது உருவான 10 மில்லியன் டொலர் கடனை அடைத்துள்ளதாக கட்சி சமீபத்தில் அறிவித்தது.

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாக இருந்தால், Ford தான் அதிகம் இழக்க நேரிடும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

‘Doug Ford இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையை தக்க வைத்திருக்க
வேண்டும், இல்லையெனில் அவர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அரசாங்கத்தில்
அவர் மேற்கொண்ட சில முடிவுகள் அதற்கு காரணமாக அமையும் என Warren
குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கசப்பான உணர்வுகளைத் தணிக்க தேர்தல்
பிரச்சாரத்திற்கு முன்னதாக முதல்வர் தனது தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என Ellerton எதிர்பார்க்கிறார்.

எந்தவொரு தவறும் இடம்பெறவில்லை அல்லது தவறுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது போல் பாசாங்கு செய்வது அவர் மீதான நம்பகத்தன்மையை அழிக்கும் என Ellerton கூறியுள்ளார்.

‘பெரும்பாலும் அரசியலில், இல்லாமற்போன ஒன்றின் மீது ஈடுபாடு அதிகரிக்கிறது’ எனWarren குறிப்பிட்டுள்ளார்.

Fordஇன் ஆலோசகர்கள் ஏற்கனவே முதல்வர் மீதான கவனத்தை குறைத்து
விட்டதாகவும் அவரின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி விட்டதாகவும் அண்மையில்
ஊடகப்பரப்பில் பேசப்பட்டதை  இந்தக் கருத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ராகவி புவிதாஸ்

(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

வர்ண ராமேஸ்வரன்: இசைக்கு எல்லை வகுக்காக் கலைஞன்

Gaya Raja

கனடா தினத்திற்குள் கனேடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது சாத்தியமா?

Gaya Raja

NCCTயின் அருவருக்கும் விளம்பரத் தாகமும், உரிமை கோரலும்!

Gaya Raja

Leave a Comment