தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

Hollywood தொடரில் கனடிய தமிழ் மாணவி மைத்திரேயி ராமகிருஷ்ணன்

2019ஆம் ஆண்டில் கனடிய தமிழர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்ட ஒரு பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன்.

Netflix ஊடக நிறுவனம் தயாரிக்கும் “Never Have I Ever” எனப் பெயரிடப்பட்டுள்ள 10 அத்தியாயங்களைக் கொண்ட தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் கனடிய தமிழரான மைத்திரேயி ராமகிருஷ்ணன். 17 வயதான உயர் நிலைப் பாடசாலை மாணவியான இவர், முதலாம் தலை முறை இந்திய அமெரிக்க இளம் பெண் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பலருக்கும் எட்டாக்கனியாக உள்ள Hollywood தயாரிப்பான இத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது கனடிய தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை பெருமையான விடயமாகும்.

எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான Lang Fisher மற்றும் நகைச்சுவை நடிகை மற்றும் எழுத்தாளரான Mindy Kaling ஆகியோரின் புதிய தொடரில் மைத்திரேயி ராமகிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கத் தெரிவானார். தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த Kaling இந்திய-தமிழ் மற்றும் பெங்காலி பின்னணியைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 15,000 பேர் விண்ணப்பித்த Netflix தயாரிக்கும் தொடருகிக்கான இந்த வாய்ப்பு புது முகமான மைத்திரேயி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. தேவி என்னும் பெயரில் அமையும் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கின்றார்.

York பல்கலைக் கழகத்தில் நாடகத்தில் மேற் கல்வியை தொடர திட்டமிட்டுள்ள மைத்திரேயி ராமகிருஷ்ணன், அண்மையில் மாத்திரமே நடிக்க முடிவு செய்துள்ளார். Disney மற்றும்Marvel Comics மீது ஈர்ப்பு கொண்டவர் இவர். Mississaugaவின் Meadowvale மேல் நிலைப் பாடசாலையின் இறுதி ஆண்டில் நடிப்பு மீதான அவரது ஆர்வம் ஆரம்பமானது. தனது பாடசாலையில் நாடகத் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார். தனது 12ஆம் ஆண்டு நாடக வகுப்பிற்காக, அவர் ஒரு நாடகத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

பல தமிழ்க் கனடியர்களைப் போலவே, இவரும் இலங்கையின் போரிலிருந்து தப்பி கனடாவுக்கு அகதிகளாக வந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தையானராம்  செல்வராஜா மற்றும் தாயான கிருத்திகாகுலேந்திரன் ஆகியோர் கனடிய சமூகத்தில் அறியப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்கள். ஆனாலும் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை தமது குழந்தைகள் மீது திணிப்பது தவறு என்ற எண்ணம் கொண்டவர்கள்.

மைத்திரேயி ராமகிருஷ்ணன் தனது கலாச்சாரத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஆங்கிலத்தில் 20 எழுத்துக்களைக் கொண்ட தனது பெயரை (Maitreyi Ramakrishnan) பலரும் செய்வது போல பொது நுகர்வுக்காக சுருக்க அவர் தயாரில்லை. தான் நடிக்கும் தொடர் குறித்த விளம்பரங்களில் தன்னை ஒரு கனடிய தமிழர் என அடையாளம் காட்டுவதை மைத்திரேயிராம கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். Netflix தனது அறிவித்தலில் இவரை கனடியத் தமிழராக அடையாளப்படுத்தியது இவரது வலியுறுத்தலின் பின்னர் நிகழ்ந்தது.

இதுவே பெருமையின் ஆரம்பம்!

பத்மன்பத்மநாதன்

Related posts

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja

கொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல!

Lankathas Pathmanathan

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக …

thesiyam

Leave a Comment