தேசியம்
செய்திகள்

Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கான மூன்று கட்டத்  திட்டம் வெளியானது!

கனடாவில் COVID-19 நோய்த் தொற்றால் முடங்கியுள்ள Ontario மாகாணத்தை, மீளவும் இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்கான திட்டமிடலை Doug Ford  தலைமையிலான Ontario மாகாண அரசு ஆரம்பித்துள்ளது.

எங்கள் மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கான ஒரு கட்டமைப்பு (“A Framework for Reopening our Province”) என அழைக்கப்படும் இந்த மூன்று கட்ட திட்டம் ஒவ்வொரு படிப்படியான கட்டத்தின் அளவுருக்களையும் கொண்டுள்ளது.

Ontario மாகாணத்திலுள்ள கட்டமைப்புகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடு படிப்படியான படி நிலைகளில் நடைபெறும். ஒவ்வொரு படி நிலைகளுக்கும் இடையில் இரண்டு முதல் நான்கு வார கால இடை வெளி கொடுக்கப்பட்டு, சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வணுகு முறையானது, மாகாணம் மீளத் திறந்து வைக்கும் போது ஏற்படக் கூடிய ஆபத்தினைக் கருத்திற் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவதுடன், அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதனையும் உறுதிப்படுத்தும்.

அரசாங்கமே தமது அணுகு முறையை வழிப்படுத்த ஒரு செயல்வரைபை உருவாக்கியுள்ளது. இந்தச்  செயல் வரைபானது மாகாணத்தை மீளத் திறந்து வைப்பதற்கான மூன்று கட்ட படி நிலைகளை உள்ளடக்கியதாக அமையும்.

இவ்வனைத்துப் படி நிலைகளிலும் பொது மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதே சமயத்தில், மக்களின் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வணிக செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். இவையிரண்டினையும் சம விகிதத்தில், ஒன்றினை ஒன்று பாதிக்காதவகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

படி நிலை ஒன்று:

செயற்பாடுகளை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த உத்தர விடப்பட்ட வணிகங்கள், பொது சுகாதார தேவையினை வழங்கும் வகையில் தமது நடவடிக்கை மாற்றியமைக்கக் கூடிய செயற்பாடுகளைத் திறப்பதற்கான வழி காட்டலை வழங்குதல் பூங்காக்கள், வெளி மைதானங்கள் போன்ற இடங்களைத் திறந்து தற்போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை அனுமதித்தல். மருத்துவமனைகளில் வழமையான மற்றும் முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைகளை மேற் கொள்ள ஆரம்பிப்பதுடன், அவை தமது வழமையான சுகாதார சேவைகளையும் தொடங்க அனுமதித்தல்.

படி நிலை இரண்டு:

சுகாதார மதிப்பீடுகளின் அடிப்படையில், சேவை அடிப்படையிலான பணிமனைகள் மற்றும் சிறு பணிமனைகள் உள்ளடங்கலான, பல்வேறு பணியிடங்கள் , வெளி அரங்குகளைத் திறந்து வைத்தல். குறைந்தளவிலான அல்லது அதிகளவிலான மக்கள் கலந்து கொள்ளக் கூடிய நிகழ்வுகளை அனுமதித்தல்.

படி நிலை மூன்று:

அனைத்து பணியிடங்களையும் திறந்து வைப்பதுடன் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி பொது நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது. ஆனாலும் இந்தத் திட்டத்துக்கான குறிப்பிட்ட திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Related posts

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம்COVID தடுப்பூசிகளை பெறலாம்

Gaya Raja

கனடாவில் COVID தொடர்பான இறப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!