February 22, 2025
தேசியம்
செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை இரண்டாம் படிக்கு நகரும் Ontario!

மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கு எதிர்வரும் புதன்கிழமை Ontario நகர்கின்றது.

வியாழக்கிழமை Doug Ford அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்டதைவிட இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரண்டாம் படிக்கு Ontario நகரவுள்ளது.

பொது சுகாதார நிபுணர்களின் ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் Ford வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறினார்.

புதன்கிழமை முதல் மீண்டும் ஐந்து பேர் வரை உட்புற சந்திப்புகளை நடத்த முடியும். அதேபோல் வெளியில் 25 பேர் வரை சந்திக்கலாம். பல மாதங்கள் மூடப்பட்டிருந்த, முடி திருத்தும் நிலையங்கள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் 30ஆம் திகதி முதல் இயங்க ஆரம்பிக்கலாம்.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Air இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் திட்டத்தின் 5வது கட்டத்திற்கு நகரும் Nova Scotia!

Gaya Raja

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு

Lankathas Pathmanathan

Leave a Comment