கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லையை மீண்டும் திறக்க கோரும் அழைப்புகள் வலுப்பெறுகின்றன.
சுற்றுலா குழுக்களும் கனேடிய, அமெரிக்க அரசியல்வாதிகளும் எல்லையை மீண்டும் திறக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சந்திப்பொன்றை முன்னெடுத்தனர். தொற்றால் நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் உள்ள தொழில்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும் வகையில் எல்லையை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து இவர்கள் வலியுறுத்தினர்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அத்தியாவசியமான பயணங்களுக்கான தடை கடந்த வருடம் March மாதம் முதல் அமுலில் உள்ளது. இந்தத் தடை எதிர்வரும் திங்கட்கிழமை காலாவதியாகிறது குறிப்பிடத்தக்கது.