February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறுகின்றது

கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் COVID  தடுப்பூசிகளை பெறவுள்ளது.

இவற்றில் அனேகமானவை Moderna தடுப்பூசியாக இருக்கும் என தெரியவருகின்றது. இந்த வாரம் மொத்தம் 7.1 மில்லியன் Moderna தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன.

முதலில் 2.9 million தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் எனவும் அவை வார நடுப்பகுதிக்குள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரியவருகிறது. ஏனைய 4.2  million தடுப்பூசிகள் வார இறுதியில் கனடாவை வந்தடையும் நிலையில் அவை அடுத்த வாரம் வரை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் அனுப்பி  வைக்கப்படாது என கூறப்படுகிறது.

தவிரவும் 2.4 million Pfizer தடுப்பூசிகளும் இந்த வாரம் கனடாவை வந்தடையவுள்ளன.

Related posts

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

தாயில்லாமல் திருப்பி அனுப்பப்படவுள்ள சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment