தேசியம்
செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு

London Ontarioவில் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய மற்றும் மாகாண அரச வழக்குரைஞர்கள் 20 வயதான சந்தேக நபர் மீது இரண்டு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். June மாதம் 6ம் திகதி மாலை நடந்த இந்தத் தாக்குதல், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் என காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திங்கட்கிழமை காலை குற்றவாளி நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டபோது, குற்றவியல் பிரிவு 83ன் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை தொடர ஒப்புதல் பெற்றதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். குற்றவாளி இன்னும் சட்ட ஆலோசனை பெறாத நிலையில் இந்த வழக்கு June 21 ஆம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியீட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலியான நான்கு குடும்ப உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகள்  வார இறுதியில் நடைபெற்றது. இதேவேளை இந்தத் தாக்குதலில் காயமடைந்த 9 வயதான Fayez Afzaal திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

September 20 கனடாவில் தேர்தல்!

Gaya Raja

Moderna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!