கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இது எல்லை மீண்டும் திறக்கப்படுவதை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்புக்கு தயாராகி வருகின்றனர்.
கனடா அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது.