செவ்வாய்க்கிழமையுடன் கனடாவின் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் 30 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 30.6 மில்லியன் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கனடாவில் தகுதியான கனேடியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
G20 நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைந்தது ஒரு தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையில் கனடா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 26.6 மில்லியன் தடுப்பூசிகள் கனேடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.