தேசியம்
செய்திகள்

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Saskatchewanனில் அமைந்திருந்த முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751  கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை Cowessess First Nation இந்த கண்டுபிடிப்பை அறிவித்தது. Cowessess First Nation, Reginaவுக்கு கிழக்கே 164 kilo meter தூரத்தில் அமைந்துள்ளது.

Saskatchewanனில் உள்ள முன்னாள் Marieval Indian வதிவிட பாடசாலையில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Marieval Indian வதிவிட பாடசாலையை சுற்றியுள்ள பகுதியின் தரையை ஊடுருவி radar மூலம் இந்த மாதம் 1ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  

Kamloops வதிவிட பாடசாலையில்   நில குறிப்புகள் ஏதுமற்ற  கல்லறைகளில் புதைக்கப்பட்ட 215 முதற்குடி குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்த புதிய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கனடாவின் முதற்குடிகள் வாழும் முன்னாள் வதிவிட பாடசாலை தளங்களில் மேலும் நூற்றுக்கணக்கான நில குறிப்புகள் ஏதுமற்ற கல்லறைகளும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் அபாயங்களை விட அதிகமானவை – Health கனடா உறுதி

Gaya Raja

தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்கிய NDP தலைவர்!!

Gaya Raja

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment