Ontarioவில் முதலாவது தடுப்பூசியாக AstraZeneca பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக Pfizer அல்லது Modernaவை பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
AstraZeneca தடுப்பூசியை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம் என Ontario அரசாங்கம் அறிவித்தது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மாகாணத்தின் புதிய தடுப்பூசி வழிகாட்டுதலில் இந்த தகவல் வெளியானது.
AstraZeneca தடுப்பூசி பெற்றவர்கள் அதே தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக பெறலாம் – அல்லது Pfizer அல்லது Moderna தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக பெறலாம் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டாவது தடுப்பூசி வழங்கல் பரிந்துரைக்கப்பட்ட 12 வார இடைவெளியில் வழங்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சு அறிவித்தது.