Manitoba அரசாங்கம் புதிய பொது சுகாதார உத்தரவுகளை வியாழக்கிழமை அறிவித்தது.
COVID தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக இந்த உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன. May மாதம் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் கூட்டங்கள், பணியிடங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் தொடர்பான புதிய பொது சுகாதார உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.
June மாதம் 12ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை Manitoba முதல்வர் Brian Pallister, மாகாண தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussin ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடிந்தவரை Manitoba வாசிகள் வீட்டில் இருப்பது அவசியம் என செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Pallister வலியுறுத்தினார்.