தேசியம்
செய்திகள்

இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த கனடியர்களை தடுத்து வைத்ததற்கு கனடிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார்.

வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது  பிரதமர் Justin Trudeau இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரினார். இத்தாலி கனேடிய சமூகம்  தடுத்து வைக்கப்பட்டது  நியாயமற்றது என பிரதமர் தனது மன்னிப்பில் குறிப்பிட்டார்.

Trudeauவின் மன்னிப்பைத் தொடர்ந்து Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole,  NDP தலைவர்  Jagmeet Singh உட்பட பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும்  கருத்து தெரிவித்தனர்.

1990 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர்  Brian Mulroney இதே விடயத்திற்காக இத்தாலி கனேடிய சமூகத்திடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் AstraZeneca தடுப்பூசிகளை உபயோகிக்கும் Ontario

Gaya Raja

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் பதவி விலகினார்

Lankathas Pathmanathan

June மாத நடுப்பதிக்குள் கனடாவை வந்தடையவுள்ள 20 இலட்சம் Moderna தடுப்பூசிகள்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!