தேசியம்
செய்திகள்

செவ்வாய்க்கிழமை முதல் Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெறலாம்!

Ontario அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் COVID தடுப்பூசி தகுதியை விரிவுபடுத்துகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் COVID தடுப்பூசியை பெறுவது Ontarioவில் சாத்தியமாகியுள்ளது.

Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams இந்த அறிவித்தலை வெளியிட்டார். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் Ontarioவில் ஏற்கனவே  திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னர் தடுப்பூசியை பெறுவதை சாத்தியப்படுத்தியுள்ளது

இந்த வாரம் கனடாவுக்கு வரவிருக்கும் தடுப்பூசிகள் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக இந்த விரிவுபடுத்தலை மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா இந்த வாரம் 45 இலட்சம் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. Pfizer மற்றும்  Moderna ஆகிய நிறுவனங்களிடமிருந்து திட்டமிடப்பட்ட விநியோகங்களாக இந்த வாரம் சுமார் 45 இலட்சம் தடுப்பூசிகளை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

Related posts

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

கனடாவுக்கு வரும் பயணிகளில் தனிமைப்படுத்தலை மறுத்தவர்களுக்கு அபராதம்!

Gaya Raja

Leave a Comment