French மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்த புதிய மொழி சீர்திருத்த மசோதாவை Quebec முன்வைக்கிறது.
மொழிச் சட்டங்களில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை முன்வைத்தது இந்த மசோதாவை Quebec அரசாங்கம் வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தது. Bill 96 எனப்படும் இந்த சட்டமூலம் மொழிகளுக்கு பொறுப்பான மாகாண அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மசோதா வணிகங்கள், மாணவர்கள், புதியவர்கள் உட்பட்டவர்களுக்கான மாற்றங்களுடன் Quebecகில் French மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. Quebecகில் உள்ள ஒரே அதிகாரப்பூர்வ மொழி French மொழி என இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது. Quebecகின் பொதுவான மொழி French என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.