தேசியம்
செய்திகள்

2 ஆவது தடுப்பூசி வழங்கலுக்கு போதுமான
AstraZeneca கனடாவில் இருக்கும்!

கனடாவில் முதலாவது AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமது இரண்டாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற விரும்புபவர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இருக்கும் என Major General Dany Fortin கூறினார்.

AstraZenecaவின் இரண்டாவது தடுப்பூசியை பெற விரும்புவோருக்கு அல்லது mRNA தடுப்பூசி பெற முடியாதவர்களுக்கும் போதுமான தடுப்பூசி கிடைக்கும் என அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புவதாக Fortin  தெரிவித்தார்.


May  மாதம் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான காலத்தில் கனடா 6 இலட்சத்து 55 ஆயிரத்துக்கு அதிகமான AstraZeneca தடுப்பூசி கனடாவை வந்தடையும் என அதிகாரிகள் கூறினர்.

கனடாவில் இதுவரை 23 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

கனடாவில் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Wayne Gretzkyயை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு Donald Trump அழைப்பு

Lankathas Pathmanathan

July இறுதிவரை மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் Torontoவில் இரத்து

Lankathas Pathmanathan

Leave a Comment