கோடை காலத்திற்குள் கனடாவில் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என பிரதமர் தெரிவித்தார்.
கோடை காலத்திற்குள் ஒருவர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என பிரதமர் Justin Trudeau நம்பிக்கை தெரிவித்தார். September மாதத்திற்குள் தகுதியான கனேடியர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெறுவதற்கு தேவையான தடுப்பூசிகளை கனடா பெறும் எனவும் Trudeau கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் பாடசாலைக்கு செல்வது, வேலைக்குத் திரும்புவது, மேலும் இயல்பு நிலைக்கு திரும்புவது குறித்து முடிவுகளை எடுக்க முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். கனடாவில் இதுவரை 50 சதவீதமான தடுப்பூசிக்கு தகுதி வாய்ந்தவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர் எனவும் Trudeau கூறினார்.