Ontario ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் திங்கட்கிழமை மிகக் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது.
திங்கட்கிழமை 2,716 தொற்றுக்களும் 19 மரணங்களும் பதிவாகின. கடந்த இரண்டு வாரங்களில் இன்று நான்காவது தடவையாக மூவாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.
February மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் நேற்று அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் Ontarioவில் பதிவாகின. ஞாயிற்றுக்கிழமை47 மரணங்களை அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர்.
தொற்றுகளின் ஏழுநாள் ,நாளாந்த சராசரி 3 ஆயிரத்து 17ஆக திங்கட்கிழமை பதிவானது. தற்போது வைத்தியசாலையில் 1,632 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அவசர சிகிச்சை பிரிவில் 828 பேர் உள்ளனர்.
இதுவரை Ontarioவில் 18 வயதுக்கு மேற்படவர்களில் 50 சதவீதமானவர்கள் வரை குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளதாக வெளியான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.