கனடா இந்த வாரம் மேலும் 20 இலட்சம் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.
கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். மாகாணங்கள் தொடர்ந்து நோய்த் தடுப்பு முயற்சிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
இதுவரை 185 இலட்சம் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இதுவரை 160 இலட்சம் தடுப்பூசிகள் கனடியர்களிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்தார். கனடியர்களில் 38 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.