COVID தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த கருத்தை தெரிவித்தார். முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் கூட தொற்றுக்கு ஆளாக நேரிடும் என Tam கூறினார்.
ஆனாலும் தடுப்பூசிகளை பெறும் எவருக்கும் தொற்றின் பரவல் ஆபத்து மிகக் குறைவானது என அவர் தெரிவித்தார்.