கனடாவின் Albertaவிற்கும் அமெரிக்காவின் Montanaவிற்கும் இடையிலான COVID தடுப்பூசி இணக்கப்பாடொன்று அறிவிக்கப்பட்டது.
Albertaவின் முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார். Albertaவின் கனரக வாகன ஓட்டுனர்களுக்காக தடுப்பூசிகளை Montana வழங்கும் என Kenney கூறினார்.
Alberta-Montana நில எல்லை ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய வணிக கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகின்றது.