Ontarioவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது.
வியாழக்கிழமை 3,424 தொற்றுகளும் 26 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன. தொற்றுடன் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 877 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Ontarioவில் பதிவான தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 3,368 ஆக உள்ளது. இது கடந்த வாரம் 3,810 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.