கனடியர்கள் தங்கள் COVID தடுப்பூசிகளை முதலில் எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். அடுத்த சில வாரங்களில் கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு, தடுப்பூசி காலவரிசை முன் நகர்த்தப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த மாத இறுதிக்குள் சுமார் 250 இலட்சம் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என கனடாவின் தேசிய தடுப்பூசி விநியோக முயற்சியில் முன்னணியில் உள்ள Major General Dany Fortin கூறினார்.