தேசியம்
செய்திகள்

Ontario சட்டமன்றம் அங்கீகரித்த இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலை!

Ontario சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான  இனப்படுகொலையை  வியாழக்கிழமை அங்கீகரித்தது.

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற Bill 104  Ontario சட்டமன்றத்தில் நிறைவேறியது.

தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாலத்தால் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணை 2019ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது. வியாழக்கிழமை இந்த சட்டமூலமாக்கல் மீதான மூன்றாம் வாசிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றினர்.

வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவி உட்பட ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்தும், தமிழர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் உரிமை மறுப்புகள் குறித்தும் உரையாற்றினர். தொடர்ந்து மகாராணியின் ஒப்பம் பெறப்பட்டதும் Bill 104 Ontario மாகாண சட்ட வரைபில் உத்தியோகபூர்வமாக இணைந்துக் கொள்ளப்படும்.

இதன் பிரகாரம் May மாதம் 18ஆம் திகதியை  முதன்மைப்படுத்திய 7 நாட்கள் Ontarioவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் நடைமுறைப்படுத்தப்படும்.

Related posts

2026 முதல் மின்சார வாகன விற்பனையை கட்டாயமாக்கும் கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

COVID: கனடிய சுகாதார அதிகாரிகளின் புதிய எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment