Ontarioவில் புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 3,000க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின.
ஆனாலும் தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கின்றது. புதன்கிழமை 2,941 தொற்றுக்களும் 44 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
April மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை. முதல் தடவையாக 3,000க்கும் குறைவான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். கடந்த வாரம் 3,810 ஆக இருந்த நாளாந்த தொற்றுகளின் ஏழு நாள் சராசரி Ontarioவில் இப்போது 3,432 ஆக உள்ளது.
Ontarioவில் செவ்வாய்க்கிழமை 2,791, திங்கட்கிழமை 3,436, ஞாயிற்றுக்கிழமை 3,732, சனிக்கிழமை 3,369 என புதிய தொற்றுக்கள் பதிவாகின.
Ontario வைத்தியசாலைகளின் 2,075 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் 882 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ப ட்டுள்ளதாகவும் 578 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசிப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை கனடாவில் April மாத ஆரம்பத்தின் பின்னர் செவ்வாய்கிழமைமிகக் குறைந்த ஒரு நாள் COVID தொற்றுகள் அறிவிக்கப்பட்டன.
செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் 6,699 தொற்றுகள் பதிவாகின. இதற்கு முன்னர் அதி குறைந்த தொற்றுக்களாக April மாதம் 6ஆம் திகதி 6,521 தொற்றுகள் பதிவாகின. செவ்வாய்கிழமைமொத்தம் 54 மரணங்களும் நாடளாவிய ரீதியில் பதிவாகின.