கனடாவில் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அகற்றும் முயற்சியாக பிரதமரின் இந்த கருத்து வெளியானது .உங்களுக்கான முறை வந்தவுடன் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்
கனடாவில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். தடுப்பூசிகள் விடயத்தில் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் கனேடியர்களுக்குமான அரசாங்கத்தின் ஆலோசனை மாறவில்லை எனவும் Trudeau செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.