தேசியம்
செய்திகள்

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கனடாவில் இதுவரையில் முதலாவது  COVID தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6,000க்கும்  அதிகமானவர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்ற பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 

April மாதம் 26ஆம் திகதி வரை 6,789 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்ற பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது தடுப்பூசியை பெற்ற பின்னர் 203 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 53 பேர் தொற்றின் காரணமாக இறந்துள்ளதாகவும் பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

அதேவேளை கனடாவில் தடுப்பூசி பெற தகுதி பெற்றவர்களில் 41 சதவீதத்திற்கு அதிகமானவர்கள்  குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

பணி நீக்கம் செய்யப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள்?

Lankathas Pathmanathan

இங்கிலாந்து வாகன விபத்தில் கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment