February மாதத்தின் பின்னர் கனடாவிற்கு வருகை தந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு COVID தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
February மாத பிற்பகுதியில் அமுலுக்கு வந்த விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் பின்னர் இந்த 5,000 தொற்றாளர்களும் அடையாளம் காணப் பட்டுள் ளனர். இவர்களில் மூன்றில் ஒருவருக்கு தொற்றின் புதிய திரிபு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தரவுகளை வெளியிட்டது.
3,748 பேர் நாடு திரும்பிய தினம் தொற்றால் பாதிக்கப்பட்டதும், 1,411 பேர் கனடாவை வந்தடைந்த 10 தினங்களுக்கு பின்னரான சோதனையில் தொற்றால் பாதிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.