Ontario திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக 4,000க்கும் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது.
திங்கள் சுகாதார அதிகாரிகள் 3,436 புதிய தொற்றுக்களையும் 16 மரணங்களையும் அறிவித்தனர். Ontario மருத்துவமனையில் 1,925 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 889 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதுடன், 611 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.