பொது முடக்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஏற்பாடு செய்த Ontario மாகாண சபை உறுப்பினர் மீது OPP குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
சுயாதீன மாகாண சபை உறுப்பினர் Randy Hillier மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. இந்த மாதம் 8ஆம் திகதி Kemptville நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. COVID கட்டுப்பாடுகளை மீறி இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக Hillier மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
COVID கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மாகாண சபை உறுப்பினர் Hillierரும் ஒருவராவார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய மூவர் Hillierரின் இரண்டு மகன்கள் மற்றும் அவரது மகள் என தெரியவருகின்றது.