முதலாவது தொகுதி Johnson & Johnson COVID தடுப்பூசிகள் புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்துள்ள தகவலை கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த வெளியிட்டார்.
3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடைந்தன. மொத்தம் 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை கனடா கொள்வனவு செய்துள்ளது. Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவில் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட நான்காவது COVID தடுப்பூசியாகும்.
இந்த விநியோகத்துடன் கனடா மொத்தம் 15 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெற்றுள்ளது. கனடியர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.