Johnson & Johnson COVID தடுப்பூசிகளால் மிகவும் அரிதான இரத்த கட்டிகளின் ஆபத்து குறித்து Health கனடா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றின் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக Health கனடா தீர்மானித்துள்ளது.கனடா இந்த வாரம் 3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகளை பெற உள்ளது, இது கனடா கொள்வனவு செய்துள்ள மொத்தம் 10 மில்லியன் தடுப்பூசிகளில் முதல் தொகுதியாகும்.
Johnson & Johnson தடுப்பூசிகளை 18 வயதிற்கு மேற்பட்ட கனடியர்களில் பயன்பாட்டிற்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.