கனடாவில் நான்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற ஆரம்பித்துள்ளனர்.
Ontario, Alberta, Manitoba, British Columbia ஆகிய மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இந்த நான்கு மாகாணங்களிலும் AstraZeneca தடுப்பூசி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் Quebec மாகாணமும் AstraZeneca தடுப்பூசி பெறக்கூடியவர்களின் வயதெல்லையை குறைக்கவுள்ளது. ஆனாலும் இந்த வயது என்னவாக இருக்கும் என்பது குறித்த அறிவித்தல் எதுவும் வெளியாகவில்லை.