கனடாவின் எல்லை கடவை கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதம் தொடரவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை விடுத்தார். கனடாவின் சர்வதேச மற்றும் அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என அமைச்சர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் Blair தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் இல்லாத சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை May மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கவும் கனடா முடிவு செய்துள்ளது. இந்த எல்லை கடவை கட்டுப்பாடுகள் கடந்த வருடம் March மாதம் முதல் கனடாவில் அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.