Johnson & Johnson, COVID தடுப்பூசிகளின் முதலாவது விநியோகம் இந்த மாத இறுதியில் கனடாவை வந்தடையவுள்ளது.கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த இந்தத் தகவலை வெளியிட்டார். இந்த மாத இறுதிக்குள் கனடா தனது முதலாவது Johnson & Johnson தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமென பிரதமர் Justin Trudeau கூறினார்
கனடா 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. மேலதிகமாக 28 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இரத்த உறைவு பக்க விளைவு காரணமாக Johnson & Johnson தடுப்பூசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக சுகாதார அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து Health கனடா அவதானித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Johnson & Johnson தடுப்பூசிகள் Health கனடாவினால் March மாதம் 5ஆம் திகதி பாவனைக்கு அனுமதிக்கப்பட்டது.