மாணவர் கல்வி கடன் வட்டியை கனடிய மத்திய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த மாதத்தின் ஆரம்பம் முதல் இந்தக் கடன் வட்டி முடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் March மாதம் 31ஆம் திகதிவரை மாணவர்களுக்கான நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் மாணவர் கல்வி கடன் தொகையில் மாதாந்தம் திருப்பிச் செலுத்தும் நடைமுறை தொடர்கிறது.
இந்த நிலையில் தொற்று காலத்தில் தொடர்ந்து வேலை தேடி வரும் சமீபத்திய பட்டதாரிகளுக்கு உதவுவதற்கு இந்த நகர்வுகள் போதாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.