தேசியம்
செய்திகள்

நேற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

Ontarioவில் வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவானதுடன் Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் மீண்டும் தலா ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன.

Ontarioவில் 4,227, Quebecகில் 1,683, Albertaவில் 1,521, British Columbiaவில் 1,262, Saskatchewanனில் 358, Manitobaவில் 179, New Brunswickகில் 8, Newfoundland and Labradorரில் 3, Nova Scotiaவில் 2, Prince Edward Islandடில் 1 என இன்றைய தொற்றுக்கள் பதிவாகின.

இதன் மூலம் கனடாவில் மொத்தம் 9 ஆயிரத்து 244 புதிய COVID தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகின. தவிரவும் Ontarioவில் 18, Quebecகில் 8, Saskatchewanனில் 6, Albertaவில் 2, British Columbiaவில் 2 என மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் 10 இலட்சத்து 45 ஆயிரத்து 278 தொற்றுகளும் 23 ஆயிரத்து 251 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன் 9 இலட்சத்து 54 ஆயிரத்து 17 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம்: Theresa Tam

Lankathas Pathmanathan

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Ontario வனவிலங்குகளில் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!