தேசியம்
செய்திகள்

Peel பிராந்திய பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படுகின்றன

Peel பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (06) முதல் நேரடி கல்விக்கு மூடப்படவுள்ளன.

Peel பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Lawrence Loh இந்த முடிவை அறிவித்தார். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு சட்டத்தின் (Health Protection and Promotion Act) பிரிவு 22ன் கீழ் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

Brampton, Caledon, Mississauga மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். Peel பிராந்தியத்தில் COVID தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த காலத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கை இணையம் மூலம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

Ontario மாகாண அரசாங்கம் பாடசாலைகள் திறந்திருப்பது பாதுகாப்பானது என அறிவித்த போதிலும் அவற்றை மூடி இணையம் மூல கற்றலுக்கு மாற Peel பிராந்தியத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கனடாவிற்கு மீண்டும் நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Patrick Brownக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான மதிப்பாய்வு கனடிய தேர்தல் ஆணையரால் ஆரம்பம்

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment