கனடாவில் COVID தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Easter விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் மூலம் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 23,008 என பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மேலதிகமாக 2,686 தொற்றுக்களும் கனடாவில் பதிவாகின. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 990,604 என அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையும் Easter ஞாயிறு விடுமுறை காரணமாக அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடமாட்டாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.