Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் கனேடிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
ஜேர்மனில் இருந்து ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்படுவதை கண்டித்து திங்கட்கிழமை மாலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் ஜேர்மனியால் நாடு கடத்தலுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நாடு கடத்தலுக்கு எதிரான ஒரு மகஜர் ஜேர்மன் துணைத் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. ஜெர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு விசேட விமானத்தில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.