தேசியம்
செய்திகள்

Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

COVID தடுப்பூசிகளை பெறுவது குறித்த தயக்கத்தை எதிர்கொள்ளும்  வகையில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறவுள்ளதாக Ontario மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியை  பெற ஊக்குவிப்பதற்காக தொலைக்காட்சியில் தடுப்பூசியை பெறவுள்ளதை ஒளிபரப்பவுள்ளதாக அமைச்சர் Christine Elliott கூறினார்.

AstraZeneca தடுப்பூசி குறித்து தயக்கங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என அமைச்சர் Elliott கூறினார். இது பாதுகாப்பானது எனவும் மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

15க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரம் AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்தியுள்ளது. ஆனாலும் இந்தத் தடுப்பூசியினால் ஏற்படும் அபாயங்களை விட  நன்மைகள் அதிகமாக உள்ளது என Health கனடா தெரிவித்துள்ளது.

Quebecகின் சுகாதார அமைச்சர்  கடந்த வாரம் Oxford-AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாக பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா வருவதற்கான COVID சோதனைத் தேவை நீக்கப்படுகிறது

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

பிரதமர் பதவி ஆபத்தில்? – மறுக்கும் Justin Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment