Ontario மாகாணம் சாம்பல் பூட்டுதல் மண்டலங்களில் வெளிப்புற உணவகங்களை அனுமதிக்கும் வகையில் COVID கட்டுப்பாடுகளை மாற்றியமைக்கவுள்ளது.
நேற்று பிற்பகல் வெளியான ஒரு அறிக்கையில், இந்த மாற்றங்கள் இன்று காலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வரும் என மாகாணம் தெரிவித்துள்ளது. இந்த மூலம் Ontario மாகாணத்தின் வண்ண குறியீட்டு வழிகாட்டுதல்களின் சிவப்பு மற்றும் Orange மண் ட லங்களில் உள்ள உணவகங்கள் அவற்றின் உட்புற அனுமதி திறனை 50 சதவீதமாக அதிகரிக்க அனுமதிக்கப்படும்.
ஆனாலும் தனியாக வசிப்பவர்கள் அல்லது பராமரிப்பாளர்களைத் தவிர, ஒரே வீட்டை ச் சேர்ந்தவர்கள் மட்டுமே உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ ஒன்றாக இருந்து உணவருந்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை Ontarioவில் நேற்று மீண்டும் அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுக்கள் பதிவாகின. 1,700க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின. சுகாதார அதிகாரிகள் 1,745 தொற்றுக்களையும் 10 புதிய மரணங்களையும் Ontarioவில் நேற்று அறிவித்தனர்.