February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

அமெரிக்கா கனடாவுக்கு 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் பேச்சாளர் Jen Psaki நேற்று வியாழக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டார். AstraZeneca தடுப்பூசிகளையே அமெரிக்கா கனடாவுக்கு அனுப்பவுள்ளது. அமெரிக்காவிடம் கனடா  தடுப்பூசி உதவிகளை கோரியுள்ளதாக நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கனடா April முதல் June மாதங்களுக்கு இடையில் 12 மில்லியனுக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகளைப் பெறவுள்ளன . கனடிய COVID தடுப்பூசி விநியோகக் குழுவின் தலைவர் Major Gen. Dany Fortin  இந்த தகவலை வெளியிட்டார். இவற்றில் 1.2 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரத்துக்குள் கனடாவை வந்தடையும் எனவும் அவர் கூறினார்.  

Related posts

Conservative தலைமை வேட்பாளர்களின் முதலாவது விவாதம் புதன்கிழமை

Lankathas Pathmanathan

கனடாவிற்கு Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கும் Moderna

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

Leave a Comment