அமெரிக்காவிடம் கனடா COVID 19 தடுப்பூசி உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று தெரிவித்தது.
ஆனாலும் கனடாவின் இந்த கோரிக்கையை வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டதா எனக் கூற அமெரிக்கா மறுத்துவிட்டது. கனடாவும் Mexicoவும் தடுப்பூசி உதவிகளை அமெரிக்காவிடமிருந்து கோரியுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கை யில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இரண்டு நாடுகளில் இருந்தும் தடுப்பூசி உதவிக்கான கோரிக்கைகளைப் பெற்றுள்ள தாக கூறிய வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.