தேசியம்
கட்டுரைகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறுபான்மை அரசாங்கம ஆட்சி செய்யும்  கனடாவில் எந்நேரமும்  ஒரு தேர்தல்  நடை பெறும் சூழ்நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில் அடுத்த தேர்தலில் போட்டியி டுவதிலிருந்து இதுவரை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். 8  நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டோம் என கூறியுள்ளனர். இது ஒரு புதிய சாதனையாக அமையக்கூடிய விடயமாகவுள்ளது.

ஒரு கொண்டாட்டம் முடிவுக்கு வரக்கூடும் என மக்கள் உணரும்போது, அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள். இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாறுபட்டவர்கள் அல்ல. சிறுபான்மை அரசாங்கத்தின் பதவிகாலம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கான பதில் தெரியாத நிலையில் நடைபெறுவது இதுதான்.

3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த ஓய்வு அறிவிப்புகளில் ஒன்று Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Navdeep Bains  உடையது.  அந்த  அறிவிப்பு  அமைச்சரவை  மாற்றம்  ஒன்றைத்  தூண்டியது.

ஏனைய இரண்டு அறிவிப்புகள் Bloc Québécois  கட்சியின்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  Simon Marcil, Louise Charbonneau  ஆகியோருடையது.  ஐந்து  Conservative  கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பதவியில் இருக்கும் கடைசி சந்தர்ப்பம் இதுவாக இருக்கும் என கூறியுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 8 ஆகியுள்ளது.

இந்த ஐந்து Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் Ontarioவைச் சேர்ந்தவர்கள்: Diane Finley (Haldimand-Norfolk), Peter Kent (Thornhill), Phil McColeman (Brantford-Brant), Bruce Stanton (Simcoe வடக்கு North), David Sweet (Flamborough-Glanbrook).

இவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். முதன்முதலில் 2004ஆம் ஆண்டிற்கும் 2008ஆம் ஆண்டிற்கும் இடையில் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் Conservative கட்சியின் பாதுகாப்பான (வெற்றி உறுதியான) ஆசனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன்,2019 பொதுத் தேர்தலில் 10 முதல் 22 சதவிகித புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றிருந்தனர்.

Sweet, தனது Flamborough  Glanbrook  தொகுதியை  ஆசனத்தை  வெறும் 2.6 சதவீத  புள்ளி களால் வென்றார், இருப்பினும், அடுத்த தேர்தலில் இது ஒரு ஊசலாடும் ஆசனமாகவும் Liberal கட்சி குறிவைக்கும் ஒரு ஆசனமாகவும் மாறியது.

Mississauga Malton  ஆசனத்தை  2019இல் Conservative கட்சியை விட  32 புள்ளிகள்  வித்தியாசத்தில் Bains வென்றிருந்தார். அதனைக் கருத்திற்கொண்டால், அந்த ஆசனத்தை Conservative கட்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை.

அடுத்த தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள Liberal கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் Bains மாத்திரமல்ல. அந்தக் கட்சியிலிருந்து ஏற்கனவே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் Michael Levitt, மற்றயவர் முன்னாள் நிதியமைச்சர் Bill Morneau. இவர்கள் இருவரும் இடைத் தேர்தலில் மாற்றீடு செய்யப்பட்டவர்கள். Ontario நாடாளுமன்ற உறுப்பினர்கள் Yasmin Ratansi, Marwan Tabbara ஆகியோர்  Liberal கட்சியை விட்டு வெளியேறிய (வெளியேற்றப்பட்ட) பின்னர் சுயேட்சை உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் அவர்கள் போட்டியிட வாய்ப்பில்லை.

இதுவரை அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என Conservative, Liberal  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் முடிவெடுத்திருந்தாலும், Bloc Québécois கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விகிதாசாரத்தில் அதிக எண்ணிக்கையில் வெளியேறுவதைக் காண முடிகிறது.

2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 Bloc Québécois  கட்சியின்  நாடாளுமன்ற  உறுப்பினர்களில் ஒருவரான  Marcil, தன்னை  துறைதேர்ந்தவர்களில்  ஒருவராக  மாற்றினார். எவ்வாறாயினும், அவரது Mirabel ஆசனம் Bloc Québécois  கட்சியின் பாதுகாப்பான ஆசனமாகத் தெரிகிறது – கடந்த தேர்தலில் அவர் அந்த ஆசனத்தை 26 புள்ளிகளால் வென்றார்.

Charbonneau 2019 இல் தான்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது வரை  நாடாளு மன்ற த்தில் உள்ள முதற்தவணை உறுப்பினராக அவர் உள்ளார். அவரும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார். Liberal கட்சியின்  வேட்பாளரை விட  2.4  புள்ளிகள்  வித்தியாசத்தில்  Trois Rivières  தொகுதியை  அவர் வென்றிருந்தார். அங்கு Conservative  கட்சியினர்  மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். Charbonneauவின் வெளியேற்றம் இந்த ஆசனத்திற்கான போட்டியை முன்னரை விட கடுமையானதாக்கும்.

இந்த கட்டத்தில், அடுத்த தேர்தலில் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை இழக்கப்போகும் கட்சிகள் சில இருக்கின்றன அவைதான் இவை.புதிய ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் தமது கட்சியில் இருவர் இன்னும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித் தீர்மானத்தை எட்டவில்லை என கூறினாலும், அவர்களின் 24 பேரும் அடுத்த தேர்தலிலும் போட்டியிடும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அடுத்த தேர்தலில் போட்டியிட போவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே பதவியில் இருக்கும் ஒருவரை மீண்டும் வேட்பாளராய் தேர்தலில் நிறுத்துவது பயனுடைய ஒரு நகர்வுதான். நன்கறிந்த பெயர், அனுபவமிக்க உள்ளூர் நிறுவனங்களுடனான பரீட்சையமும் உள்ளார்ந்த தொடர்பும் ஏனைய வேட்பாளர் களை விட பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமானவை. ஆனாலும் சில பதவியில் உள்ள வேட்பாளர்கள் ஏனையவர்களையும் விட மதிப்பு மிக்கவர்கள்.

புதிய ஜனநாயகக் கட்சியின் Alexandre Boulerice, 2019 தேர்தலில்  தனது சொந்த  தொகுதியில்  அதிக தாக்கத்தை  ஏற்படுத்தியவர்.  ஒரு  பொதுவான  ஜனநாயக்  கட்சி  வேட்பாளர்  பெறக்கூடிய  புள்ளிகளை விட 22 புள்ளிகள் அதிகமாகப் பெற்றிருந்தார். Quebecகின்  Montreal  தொகுதியான Rosemont–La Petite-Patrie ற்கான தேர்தலில் புதிய ஜனநாயகக்  கட்சியின்  அம்மாகாணத்தி ற்கான இறங்குமுக போக்கை அவர் மாற்றியிருந்தார். ஆனால், பதவியில் இருக்கும் பெரும்பாலானோர் செலுத்தும் தாக்கம் மிதமானவை. தற்போதுள்ள வேட்பாளர்கள் 2015, 2019  தேர்தல்களுக்கு  இடையில் சராசரியாக 0.8 சதவீத புள்ளிகள் ஆதரவை இழந்தனர்.

தங்களின் பதவியில் இருக்கும் வேட்பாளர்கள் போட்டியிடாத நிலையில், அந்த தொகுதியில் புதியவர்களை நிறுத்துகையில் வெளியேறிய முன்னவர்களின் செயல்திறனை விட சராசரியாக 6.6 புள்ளிகள் மோசமான இழப்பை கட்சிகள் சந்திக்கும். இது கடந்த தேர்தல் மூலம் பதவியில் இருப்பவரின் மதிப்பை சுமார் 6 புள்ளிகளில் வைக்கிறது. பதவியில் இருப்பது எப்போதுமே தீர்க்கமானதல்ல என்றாலும், அது இன்னும் ஆதிக்கம் ஆசனப் பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தக் கூடியது:

2019 தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 58 தொகுதிகள் அந்த 6 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளால் தீர்மானிக்கப்பட்டது.இதுவரை அறிவித்தவர்களைத் தவிர இன்னும் பலர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுக்கக்கூடும் என்கிறது வரலாறு.

Ratansi,Tabbara ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கருதினால், அடுத்த தேர்தலை எதிர்கொள்ளாத தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது – இது முழு நாடாளுமன்றத்திலும் மூன்று சதவீதம் மாத்திரமே. இது தேர்தலுக்கு முன்னதாக ஓய்வை அறிவித்தவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை பதிவாகும் – அதாவது இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கக்கூடும் என இது பரிந்துரைக்கிறது.

சிறுபான்மையான உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் அரசாங்கங்களைக் கொண்ட நாடாளுமன்றங்கள், அவற்றின் குறுகிய ஆயுட்காலம் காரணமாக, பெரும்பான்மை நாடாளுமன்றங்களில் பணியாற்றுபவர்களை விட குறைந்தளவான நாடாளுமன்ற உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்கும் நிலையை நாடுகின்றன.

1867 முதல், சிறுபான்மை நாடாளுமன்றங்களை விட (8.8 சதவீதம்) பெரும்பான்மை நாடாளுமன்றங்களில் (சராசரியாக 17.5 சதவீத உறுப்பினர்கள்) இரண்டு மடங்கு அதிகமாக ஓய்வு பெற்றவர்கள் உள்ளனர். பிரதமர் Stephen Harperரின் சிறுபான்மை அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில், 2011இல் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஓய்வு பதிவாகியிருந்தது. அந்த எண்ணிக்கை வெறும் 5.5 சதவீதமாக இருந்தது.

தற்போதைய சிறுபான்மை அரசாங்கம் அளவிற்கு ஏனை சிறுபான்மை அரசாங்கங்கள் ஆட்சிக்காலத்தைக் கொண்டிருக்க தவறினாலும், 1957-58, 1962-63 ஆகிய  ஆண்டுகளில் John Diefenbakerரின் இரண்டு சிறுபான்மை அரசாங்கங்களும் 1979-80 இல் Diefenbakerரின் சிறுபான்மை அரசாங்கமும் 6 முதல் 9 வரையான ஓய்வு விகிதத்தைக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானிக்காத வரை, கனடாவின் அடுத்த தேர்தலில் புதிய சாதனை நிகழ்த்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சபரி கிருபாகரன்

தேசியம் February 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை

Related posts

தமிழ் இனப்படுகொலை மசோதாவுக்கான Ontario முதல்வரின் ஆதரவைக் கோர ஆயிரம் டொலர் நன்கொடை வழங்கவும்! விஜய் தணிகாசலம் சார்பில் அழைப்பு

thesiyam

தேசிய நாயகன் கருணா வின்சென்ற்

thesiyam

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

Leave a Comment