COVID தொற்றின் பரவலுக்கு மத்தியில் பொது தேர்தலைத் தூண்ட மாட்டேன் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh இன்று (புதன்) தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தில் இந்த உறுதிமொழியை அவர் முன்வைத்தார். இதே போன்ற ஒரு உறுதியை பிரதமர் Justin Trudeauவினால் வழங்க முடியுமா எனவும் Singh கேள்வி எழுப்பினார்
இதற்கு பதிலளித்த பிரதமர் சிறுபான்மை அரசொன்றை தான் தலைமை ஏற்றுள்ள நிலையில் தேர்தல் ஒன்றை தூண்டும் முடிவை எதிர் கட்சிகளே எடுக்க வேண்டும் எனக் கூறினார். தவிரவும் தனது கவனம் தொற்றில் இருந்து மீள்வதற்கு கனடாவை சிறந்த வகையில் வழி நடத்துவதே எனவும் பிரதமர் Trudeau கூறினார்.