தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

P2P போராட்டத்திற்கு கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு குரல்

இலங்கையில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை நடைபெறும் நீதிக்காக போராட்டத்திற்கு இன்று (வியாழன்) கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மெய்நிகர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, இந்தப் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், நீதிக்காக போராடுவோருக்கான தனது ஆதரவைத் தெரிவிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தனது உரையில் கூறினார்.

உயிர் தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்தில் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் இணைந்து கொண்டுள்ளதை ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார். இலங்கைத்தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது உரையில் வலியுறுத்தினார்.

இன்று நாடாளுமன்ற அமர்வில் ஹரி ஆனந்தசங்கரி ஆற்றிய உரை (தமிழ் மொழிபெயர்ப்பு)

“சபாநாயகர் அவர்களே,

இலங்கை அதன் 73ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காக நடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர் தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள். இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான பொறுப்புக்கூறலே அவர்களது நோக்கம்.

சபாநாயகர் அவர்களே, இலங்கைத் தீவு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து குற்றம்புரிவோர் தண்டிக்கப்படாத நிலை காணப்படுவதுடன், சட்டத்தின் ஆட்சியும் செயலிழந்துள்ளது.

இலங்கை அரசு கடந்த சில மாதங்களில் மட்டும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்து, போர்க் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, முஸ்;லிம் சிறுபான்மையினரின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்ததுடன், குடிசார் அமைப்புக்கள் பலவற்றை இராணுவம் பொறுப்பேற்றும் உள்ளது.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டுமெனக் கடந்த வாரம் முடிவு செய்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர், இலங்கை தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இன்றிச் செயற்பட அனுமதிக்கப்பட்டால் முன்னரைப்போன்ற அட்டூழியங்கள் மீண்டும் இடம்பெறுமென எச்சரித்துள்ளார்.

ஆகையால், இலங்கைத் தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்”

MP Anandasangaree’s Statement in the House of Commons

“Mr. Speaker,

As Sri Lanka marks its 73rd Independence Day, I rise to express my solidarity with those “Walking for Justice” from ‘Pottuvil to Polikandi.’ They are survivors and family members of the disappeared, and are joined by civil society organizers and political leaders. Their purpose is to seek accountability for war crimes, crimes against humanity, and genocide against the Tamil people by the Sri Lankan state.

Mr. Speaker – impunity has prevailed on the island since its independence and the rule of law has broken down.

In the last few months alone, Sri Lanka has desecrated the Mullivaikal Genocide Memorial at Jaffna University, pardoned war criminals, forced cremations on Muslim minorities, and the military has taken over many civilian run bodies.

Last week, the United Nations High Commissioner for Human Rights concluded that Sri Lanka be referred to the International Criminal Court, and cautioned that recurrence of past atrocities is likely if Sri Lanka goes unchecked.

The world must therefore act with urgency to ensure that Tamils can live on the island with peace, justice and self-determination.”

Related posts

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

Lankathas Pathmanathan

Ontario முன்னாள் சட்டமா அதிபர் மரணம்

Lankathas Pathmanathan

எரிவாயு, எரிபொருள் வரிகளை குறைக்கும் சட்டமூலம் Ontarioவில்

Lankathas Pathmanathan

Leave a Comment