கனடா முழுவதும் வேரூன்றும் COVID தொற்றின் புதிய திரிபுகள் குறித்து கனடாவின் உயர் மருத்துவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கனடா மிகவும் நுட்பமான காலகட்டத்தில் இருப்பதாக தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (செவ்வாய்) கூறினார். புதிய தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும், வேகமாக பரவுகின்ற புதிய திரிபுகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார் .
இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் முதலில் அடையாளம் காணப்பட்ட திரிபுகளின் எண்ணிக்கை கனடாவில் 150வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என இன்று வைத்தியர் Tam தெரிவித்தார்.