COVID தொற்றின் மத்தியில் நடத்தையில் மாற்றம் ஏற்படாமல் விட்டால் நாளாந்தம் 20 ஆயிரம் தொற்றுகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை (வெள்ளி) கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியினால் புதுப்பிக்கப்பட்ட modelling விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்தத் தகவல் வெளியானது. இந்த கணிப்புகளின் பிரகாரம் அனைத்து வகைகளிலும் COVID நெருக்கடி மோசமடைந்து வருவதைக் காட்டுகின்றது.
இந்த மாத (November) இறுதிக்குள் கனடா மொத்தம் 366,500 முதல் 378,600 வரை தொற்றுகளும், 11,870 முதல் 12,120 வரை மரணங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடியர்கள் தங்களின் தற்போதைய நடவடிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் விட்டால் நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கும் எனவும், December மாதத்திற்குள் தற்போதைய நிலை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு 20,000 வழக்குகளைப் பதிவுசெய்யக்கூடும் எனவும் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.